கென்ய தலைநகர் நைரோபியில் கனமழையால் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
நைரோபியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 6 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.
இதையடுத்து செஞ்சிலுவை சங்கத்தினர், போலீஸார் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் 121 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
இதில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 2 ஆண்டுகளே ஆன இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தவிர, நைரோபி தொழிற்பேட்டை பகுதியில் வெள்ளத்தில் வாகனம் அடித்துச் செல்லப்பட்டதில் இருவர் இறந்தனர். மேலும் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேரும், வெள்ளத்தில் மூழ்கி ஒருவரும் இறந்தனர்
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago