சேவையை நிறுத்திய கருக்கலைப்பு மையங்கள்: தொடரும் அமெரிக்க பெண்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

டெக்சாஸ்: அமெரிக்காவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்பு நிலையங்கள் தங்களது செயல்பாட்டை நிறுத்தியுள்ளன.

அமெரிக்காவில் அண்மையில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியல் சாசன உரிமையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டது. கருக்கலைப்புக்கு தடை விதிப்பது குறித்து அந்தந்த மாகாண அரசுகளே முடிவு செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டது.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், கருக்கலைப்பை அனுமதிக்கும் மாகாணங்களுக்கோ அல்லது அண்டை நாடுகளுக்கோ செல்ல விரும்பும் தங்களின் ஊழியர்களுக்கு விடுப்பு, பயணச் செலவு என பல்வேறு சலுகைகளை அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கூகுள், கருக்கலைப்புக்காக மருத்துவமனை செல்வோரின் சேர்ச் ஹிஸ்டரியில் இருந்து அந்த குறிப்பிட்ட தகவல் நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளது

இந்த நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்பு நிலையங்கள் தங்களது செயல்பாட்டை நிறுத்தியுள்ளது பெண்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாகாணத்தில் கருக்கலைப்புக்காக விண்ணப்பித்திருந்த அனைத்து மனுக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டெக்சாஸ் பெண்கள் நல தலைவர் ஏமி கூறும்போது, “ எங்களுக்காகவும், நாங்கள் வழங்கும் அற்புதமான கருக்கலைப்பு சிகிச்சையை சேவையாக செய்து வாழ்க்கையை அர்ப்பணித்த மக்களுக்காகவும் நான் வேதனைப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.

கருக்கலைப்பு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பெண்கள் பல போராட்டங்களை அமெரிக்காவில் முன்னெடுத்து வருகிறார்கள். கருக்கலைப்பு எதிரான இந்த தீர்ப்பு இறுதியல்ல என்று ஜனநாயக் கட்சி தலைமையிலான பைடன் அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE