நியூயார்க்: உலக அளவில் கரோனாவுக்கு பிறகு பெரிய நகரங்களில் செலவுகள் மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. இந்த நகரங்களில் சாதாரண மக்களை விடவும் செல்வந்தர்களுக்கு செலவு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூலியஸ் பேர் குரூப் லிமிடெட்டின் 2022 உலகளாவிய செல்வம் மற்றும் வாழ்க்கை முறை அடிப்படையில் உலகின் செலவு மிக்க நகரங்களை வரிசைப்படுத்தியுள்ளது. இது வீடுகள், சொத்து, கார்கள், விமான கட்டணம், பள்ளி மற்றும் பிற செலவுகளை பகுப்பாய்வு செய்து உலகின் மிக விலையுயர்ந்த நகரங்களை தரவரிசைப்படுத்துகிறது. இந்த பட்டியலின் விவரம்:
ஷாங்காய்: ஷாங்காய் மீண்டும் இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சீனாவின் மிகப்பெரிய நகரமான இது, உலகின் பொருளாதார தலைநகரமாக கருதப்படுகிறது. பணக்காரர்கள் அதிகம் வாழும் ஒரு நகரமாகும். ஷாங்காயிலும் கூட சொகுசு பொருட்களின் விலை அதிகரிப்பு, பணவீக்கம் உயர்வு போன்ற காரணங்களால் மக்களின் வாங்கும் திறன் என்பது குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
லண்டன்: பிரிட்டன் தலைநகரமான லண்டன் உலகின் அதிக செலவு பிடிக்கும் நகரங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
» ''எதிர்பார்ப்புகள் வலி கொடுக்கிறது'' - இந்திய அணியில் இடம் பிடிக்காத ராகுல் திவாட்டியா ட்வீட்
தைபே: தாய்வானின் தலை நகரமான தைபே மூன்றாவது இடத்தில் உள்ளது. தைவானின் பொருளாதார மையமாக உள்ள தைபே, கலாச்சார நகரமாகவும் உள்ளது.
ஹாங்காங்: இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ள ஹாங்காங் ஆசியாவின் முக்கிய நகரமாகும். பிரிட்டிஷ் காலனியாக இருந்த இந்த நகரத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா தொடர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை தரம், வீட்டின் விலை, கார்கள், விமான போக்குவரத்து, பள்ளிகள் என அனைத்தும் இந்த நகரத்தில் அதிக செலவு மிக்கதாக உள்ளது.
சிங்கப்பூர்: உலகின் அதிக செலவு மிக்க நகரங்களில் 5வது இடத்தினை பிடித்துள்ள நகரம் சிங்கப்பூர். இங்கு உணவு பொருட்கள் விலை, வாடகை கட்டணம் என எல்லாம் அதிகம்.
மொனாகோ: ஐரோப்பாவின் சுற்றுலா நகரமான மொனாகோ உலகின் ஆறாவது செலவு மிக்க நகரமாகும். மொனகோ பழமையான நகரங்களில் ஒன்று.
சூரிச்: உலகின் சொர்க்கப்புரியாக வர்ணிக்கப்படும் ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்தில் உள்ள நகரமான சூரிச்சும் பெரும் செலவு மிக்க நகரமாகும். தங்குமிடம், உணவு, போக்குவரத்து என மொத்த செலவுமே அதிகம் தான்.
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோ உலகின் பணத்தை அதிகம் உறிஞ்சும் நகரங்களின் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் 9-வது காஸ்ட்லியான நகரமாகும்.
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 10-வது இடத்தில் உள்ளது. கரோனாவுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது அதிகரித்து வருவது இந்த நகரத்தின் செலவுகளை அதிகரிக்க செய்துள்ளது. இங்கு உணவு, தங்கும் இடம் என அனைத்துமே செலவு மிக்கது.
உயரும் செலவுகள்
கடந்த ஓராண்டில் கரோனவுக்கு பிறகு பல நாடுகளில் பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் செலவுகள் அதிகரித்து வருகின்றன. செல்வந்தர்கள் கூட பணவீக்கத்திலிருந்து விடுபடவில்லை என்பதை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இது அமெரிக்காவில் 8.6% மற்றும் இங்கிலாந்தில் 9% ஐ எட்டியுள்ளது.
குறைந்த வசதி படைத்தவர்களை விட அவர்களால் அதை எளிதில் தாங்க முடிந்தாலும் கூட, பணக்காரர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வு காரணமாக மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்துகின்றன. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி உலகின் 500 பணக்காரர்கள் மட்டும் இந்த ஆண்டு மொத்தமாக 1.4 டிரில்லியன் டாலர்கள் தங்கள் மொத்த செல்வத்திலிருந்து செலவழித்துள்ளனர்.
அடுத்த ஆய்வு
இதுபோலவே குளோபல் மொபிலிட்டி நிறுவனம் மற்றும் வாழ்க்கைச் செலவு நிபுணர்கள், இசிஏ இன்டர்நேஷனல் - 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் வசிப்பதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மிகவும் விலையுயர்ந்த இடமாக ஹாங்காங் உள்ளது. முதல் 10 இடங்களில் ஆசியாவின் நான்கு நகரங்கள் பிடித்துள்ளன. முதல் 20 இடங்களில் ஆசியாவின் பத்து நகரங்கள் உள்ளன.
1) ஹாங்காங், 2) நியூயார்க், 3) ஜெனிவா, 4) லண்டன், 5) டோக்கியோ, 6) டெல் அவிவ் ,7) சூரிச் 8) ஷாங்காய், 9) குவாங்சோ, 10) சியோல் ஆகியவை இடம் பிடித்துள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
20 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago