நாங்கள் அமெரிக்காவுக்கு அடிமை இல்லை என்று பாகிஸ் தான் உள்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
அல்-காய்தா தலைவர் பின்லேடனை கண்டுபிடிப்பதில் அமெரிக்காவுக்கு உதவிய பாகிஸ்தான் டாக்டர் ஷகில் அப்ரிதி 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார்.
இதை குறிப்பிட்டு பேசிய அமெரிக்க குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், நான் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 2 நிமிடங்களில் ஷகில் அப்ரிதியை விடுதலை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் கூறியிருப்பதாவது: நாங்கள் அமெரிக்காவுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் காலனி நாடு அல்ல. டாக்டர் ஷகில் அப்ரிதி பாகிஸ்தான் குடிமகன். அவரது எதிர்காலத்தை பாகிஸ்தான் நீதிமன்றமும் அரசும்தான் தீர்மானிக்கும். வேறு யாரும் தலையிட முடியாது.
பாகிஸ்தானுக்கு அள்ளிக் கொடுப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா அளிக்கும் நிதி மிகச் சொற்பம். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் நாங்கள் இழந்தவை ஏராளம். அமெரிக்கா அளிக்கும் நிதிக்காக எங்களை யாரும் மிரட்ட முடியாது.
இறையாண்மைமிக்க நாடு களுக்கு எப்படி மதிப்பளித்துப் பேச வேண்டும் என்பதை டிரம்ப் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago