கடந்த ஒரு வாரத்தில் மத்திய தரைக் கடல் பகுதியில் 3 கப்பல் கள் மூழ்கி 700-க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்துள்ளனர் என்று ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கரோலிட்டா சமி கூறியதாவது:
கடந்த புதன்கிழமை 100 அகதிகளுடன் மத்திய தரைக் கடலில் சென்று கொண்டிருந்த சிறிய ரக கப்பல் கடலில் மூழ்கி அனைவரும் உயிரிழந் துள்ளனர். இதைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை லிபியா வின் சபர்தா துறைமுகத்தில் இருந்து 670 அகதிகளுடன் புறப் பட்ட கப்பல் மத்திய தரைக் கடலில் மூழ்கியது. இதில் 25 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். 79 பேர் இத்தாலிய கடற்படையினரால் மீட்கப்பட்டனர். 15 உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டன. ஆனால் 550 பேரை காணவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை 200-க்கும் மேற்பட்ட அகதிகளுடன் மத்திய தரைக் கடலில் சென்ற கப்பல் கடலில் மூழ்கியது. இதில் 135 பேர் மீட்கப்பட்டனர். 45 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் பலரை காணவில்லை.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந் துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
3 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago