'அமெரிக்கர்களின் வரவேற்பு அதிகம்' - சிகாகோவில் உள்ள இந்திய உணவகத்துக்கு விருது

By செய்திப்பிரிவு

சிகாகோ: அமெரிக்காவில் உள்ள இந்திய உணவகம் ஒன்று, சிறந்த உணவகத்துக்கான விருதை பெற்றுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தின் ஆசிவில்லி பகுதியில் ‘சாய் பானி’ என்ற இந்திய தெருவோர உணவகம் ஒன்று உள்ளது. உணவகத்தின் பெயரே ‘டீ’ மற்றும் ‘தண்ணீர்’. இங்கு இந்திய இனிப்பு மற்றும் காரங்களும் குறைந்த விலைக்கு மிகத் தரமாக வழங்கப்படுகின்றன.

சிகாகோவில் உள்ள ஜேம்ஸ் பியர்ட் அறக்கட்டளை அமெரிக்காவில் உள்ள சிறந்த உணவங்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. கரோனா பரவல் காரணமாக பல உணவு விடுதிகள் மூடப்பட்டிருந்ததால், கடந்த 2 ஆண்டுகளாக இந்த விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது, மீண்டும் உணவங்களை தேர்து செய்து விருதுகளை அறிவித்துள்ளது.

இதில் ‘சாய் பானி’ என்ற உணவகம் அமெரிக்காவின் மிகச் சிறந்த உணவகம் என்ற விருதை பெற்றது. பணவீக்கம் அதிகரிப்பால், உணவுப் பொருட்களுக்கு அமெரிக்கர்கள் அதிக பணம் செலவு செய்கின்றனர். இந்நிலையில் குறைவான விலையில் உணவுப் பொருட்களை விற்கும் சாய் பானி என்ற இந்திய உணவகம், அமெரிக்கர்களின் வரவேற்பை பெற்று சிறந்த உணவுத்துக்கான விருதை பெற்றுள்ளது.

வழக்கமாக இந்த விருதை அமெரிக்காவின் நியூயார்க் அல்லது சிகாகோ நகரில் உள்ள உணவகங்களே பெற்று வந்தன. ஆனால் இந்தாண்டு, அமெரிக்காவின் பல பகுதிகளைச் சேர்ந்த உணவங்களுக்கும் விருது கிடைத்துள்ளது. மின்னாபோலிஸ் நகரில் உள்ள ஒவாம்னி என்ற உணவகத்துக்கு சிறந்த புதிய உணவகம் என்ற விருது கிடைத்துள்ளது. இங்கு பணியாற்றுபவர்களில் 75 சதவீதம் பேர் அமெரிக்கர்கள்.

அரிசோனா மாகாணத்தின் டக்சன் நகரில் உள்ள ‘பேரியோ பிரட்’ என்ற பேக்கரியில் பணியாற்றும் டான் கெரா என்பவர் சிறந்த பேக்கர் விருதை பெற்றுள்ளார். இவர் பாலவனப் பகுதியில் விளைவிக்கப்படும் பழங்கால உணவு தானியங்களில் இருந்து ரொட்டி வகைகளை தயாரிக்கிறார்.

ஜார்ஜியா மாகாணத்தின் சவானா நகரில் உள்ள ‘தி கிரே’ என்ற உணவகத்தில் பணியாற்றும் மசாமா பெய்லி என்பவர் மிகச் சிறந்த சமையற் கலைஞருக்கான விருதுதை பெற்றுள்ளார்.

இந்தாண்டு விருதுகள், உண்மையான பன்முகத்தன்மை பிரதிபலிக்கின்றன என ஜேம்ஸ் பியர்ட் அறக்கட்டளை நிறுவனத்தின் துணைத் தலைவர் டான் பத்மோர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE