மரண தண்டனையை ஒழித்தது மலேசியா; மாற்று தண்டனைக்கு ஆலோசனை

By செய்திப்பிரிவு

கோலா லம்பூர்: மரண தண்டனைகள் ரத்து செய்யப்படுவதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. இனி மரண தண்டனைகளுக்கு பதிலாக மாற்று தண்டனைகள் வழங்கப்படும் என்றும் மலேசிய அரசின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மலேசிய சட்டத் துறை அமைச்சர் வான் ஜுனைதி ஜாஃபர் கூறும்போது, ”தூக்குத் தண்டனைக்கு எதிரான மசோதாவை அமைச்சரவை ஒப்புக்கொண்டது. மரண தண்டனைக்கு பதிலாக என்னென்ன தண்டனைகளை வழங்கலாம் என்பது குறித்து மேலும் ஆய்வு நடத்தப்படும்.

மரண தண்டனை விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவு, அனைத்துத் தரப்பினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், உத்தரவாதம் அளிப்பதையும் உறுதி செய்வதில் மலேசிய அரசாங்கத்தின் முன்னுரிமையைக் காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

மலேசிய அரசின் இந்த முடிவின் மூலம், அந்நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 1000-க்கும் அதிகமானவர்களுக்கு அந்த தண்டனை நிறைவேற்றப்படாது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மலேசியாவில் போதைப்பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட 11 குற்றங்களுக்கு மரண தண்டனைகள் வழக்கப்பட்டு வந்தன. மரண தண்டனைகளுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில், மரண தண்டனையை மலேசிய அரசு ஒழித்துள்ளது.

மலேசிய அரசின் இந்த முடிவை பல்வேறு தரப்பட்ட மக்கள் வரவேற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்