இந்தியா - எமிரேட்ஸ் இடையே தொழில்நுட்பத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே தொழில்துறை மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முதலீடுகள், தொழில்நுட்ப பரிமாற்றம், தொழில் நிறுவனங்களில் முக்கிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளின் தொழில்துறைகளை வலுப்படுத்தி மேம்படுத்துவது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இது வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் உதவும்.

இந்த ஒப்பந்தம் அமலாகும் போது, பரஸ்பர ஒத்துழைப்புள்ள அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக புதுப்பிக்கவல்ல எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, தொழில் துறை சார்ந்த தொழில்நுட்பங்கள், சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுப்பிடிப்பை அதிகரிக்க வழிவகுக்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்