போராடிய மக்கள் மீது தாக்குதல்: மகிந்தா ராஜபக்சேவிடம் இலங்கை போலீஸார் விசாரணை

By செய்திப்பிரிவு

கொழும்பு: இலங்கையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவிடம் இலங்கை சிபிசிஐடி போலீஸார் 3 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை அர அரசியலில் அங்கம் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர்.

அண்மையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களின் கூடாரங்களை கிழித்தெறிந்து தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். சில இடங்களில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பாரம்பரிய வீட்டை எரித்தனர். ராஜபக்ச குடும்பத்தினரின் வீடுகள், சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. 35 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்த கலவரத்தில் 10 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது பெரும் கலவரமாக மாறியது. மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதனையடுத்து மகிந்தா ராஜபக்சே கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார். திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சமடைந்தார்.

இந்தநிலையில் இலங்கையில் நடந்த கலவரம் குறித்து முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவிடம் இலங்கை இலங்கை குற்றப்பிரிவு போலீஸார் 3 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை மகிந்தாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) போலீஸார் சுமார் மூன்று மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

கடந்த வாரம் இலங்கையின் ஆளும் எஸ்எல்பிபி நாடாளுமன்றக் குழுவின் மூன்று உறுப்பினர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். இவர்கள் மோதல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது குறித்து இந்த விசாரணை நடைபெற்றது. இவர்களில் இருவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சரும் மகிந்த ராஜபக்சேவின் மகனுமான நமல் ராஜபக்சேவை அழைத்து கடந்த வெள்ளிக்கிழமை குற்றப்பிரிவு போலீஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர். வன்முறையைத் தூண்டியதாக எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா மீது ஆளும் கூட்டணி கட்சியினர் குற்றம் சாட்டினர். ஆனால் அதனை ஜனதா விமுக்தி பெரமுனா திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

மேலும்