இப்போதும் பனிப்போரில் அமெரிக்கா: சீனா குற்றச்சாட்டு

By ராய்ட்டர்ஸ்

அமெரிக்கா இப்போதும் பனிப்போரில் ஈடுபட்டு வருகிறது. அந்த மனநிலையில் இருந்து அமெரிக்கா மாற வேண்டும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.

வியட்நாம் நாட்டுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா தடை விதித்திருந்தது. தென்சீனக் கடல் விவகாரத்தால் இருநாடுகளும் அண்மைகாலமாக நெருக்கமாகியுள்ளன. இதைத் தொடர்ந்து வியட்நாமுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா அண்மையில் நீக்கியது.

இதுகுறித்து சீன பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் யாங் யுஜுன், பெய்ஜிங்கில் நேற்று கூறியதாவது:

குறிப்பிட்ட சில நாடுகளுக்கு (சீனா) ஆயுதங்களை வழங்க அமெரிக்கா தடை விதித்துள்ளது. அந்த வகையில் அமெரிக்கா இப்போதும் பனிப்போரில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய மனநிலையில் இருந்து அந்நாடு மாற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 1989-ல் சீனாவில் ஏற்பட்ட ஜனநாயக புரட்சியை அந்த நாடு ராணுவ பலத்தால் அடக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு சீனாவுக்கு ஆயுதங்களை விற்க அமெரிக்கா தடை விதித்தது. இதை குறிப்

பிட்டே சீன அரசு செய்தித் தொடர்பாளர் மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்