வடகொரியாவில் 8.2 லட்சம் பேருக்கு கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

சியோல்: வடகொரியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா வைரஸ் பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 2 லட்சம் பேருக்கு தொற்று ஏற்படுகிறது. கடந்த சனிக்கிழமை 2.96 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த 3 நாட்களில் மட்டும் 8.2 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர்களில் 3.24 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். நாள்தோறும் சுமார் 50 பேர் உயிரிழக்கின்றனர். வடகொரியாவில் மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. குறிப்பாக கரோனா வைரஸை கண்டறியும் ஆய்வகங்கள் மிகவும் குறைவாக உள்ளன. எனவே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அண்டை நாடான சீனாவிடம், வடகொரியா உதவி கோரியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

மேலும்