சீனாவின் ஜீரோ கரோனா திட்டம்: உலக சுகாதார அமைப்பு விமர்சனம்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: சீனாவின் ஜீரோ கரோனா திட்டத்தை உலக சுகாதார அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தாக்கம் 2022 ஆம் ஆண்டு முதலே குறைந்து வருகிறது. இந்த நிலையில் சீனாவில் கடந்த மார்ச் மாதம் கரோனா தொற்று அதிகரித்தது. இதனை தொடர்ந்து கரோனாவை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்கு உலகளவில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் கரோனாவுக்கு எதிரான சீனாவின் திட்டத்தை மாற்றி கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் கூறும்போது, “ ‘ஜீரோ கரோனா’ கொள்கையை சீன அரசு அமல்படுத்தி உள்ளது . இதன் மூலம் ஒருவருக்கு கூட கரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை அடைவதுதான் இதன் நோக்கம் ஆகும். இதற்காக கடுமையான ஊரடங்குகளை சீனா அமல்படுத்தியுள்ளது. இது ஷாங்காய், பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் அமலில் உள்ளது. இதற்கு எதிராக மக்கள் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இவற்றை எல்லாம் சீன அரசு கருத்தில் கொள்ள வேண்டும். சீனாவின் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

உலக சுகாதரா அமைப்பின் விமர்சனத்துக்கு சீனா இதுவரை பதிலளிக்கவில்லை. 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸுக்கு அங்கு இதுவரை 15,000 பேர் வரை பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE