இலங்கையின் ஜனநாயகம், பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவு: மத்திய அரசு உறுதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இலங்கையில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ள நிலையில் அந்நாட்டின் ஜனநாயகத்திற்கும், நிலைத்தன்மைக்கும், பொருளாதாரத்தை மீட்டமைப்பதற்கும் இந்தியா முழு ஆதரவு வழங்கும் என அரசு தெரிவித்துள்ளது.

"அண்டை நாடும் வரலாற்று ரீதியிலான பிணைப்பும் கொண்ட இலங்கையின் ஜனநாயகம், நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், அதன் பொருளாதார மீட்சிக்கும் இந்தியா தனது முழு ஆதரவை வழங்கும். இலங்கைக்கு இந்தியா முழு ஆதரவளிக்ககும். நமது அண்டை நாட்டு கொள்கைகளின் படி, இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்நாட்டு மக்கள் மீண்டு வருவதற்கு இந்தியா உதவி உள்ளது. நடப்பு ஆண்டில் மட்டுமே இலங்கைக்கு சுமார் 27 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை உதவியாக இந்தியா வழங்கியுள்ளது" என தெரிவித்துள்ளார் இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி.

இலங்கை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியின் போது இதனை தெரிவித்தார் பக்சி. மேலும் பேசிய பக்சி, "நெருக்கடி நிலையில் இருந்து அவர்கள் மீண்டு வரவே இந்தியா இந்த உதவியை வழங்கியுள்ளது. நிதி உதவி மட்டுமல்லாது உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையால் தவித்து வரும் இலங்கைக்கு அத்தியாவசிய பொருள்களையும் இந்திய அரசும், இந்திய மக்களும் வழங்கியுள்ளனர்" என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சில இடங்களில் போலீசார் உடன் மோதலிலும் ஈடுபட்டுள்ளனர் போராட்டம் மேற்கொண்டு வருபவர்கள். அதனால் அந்த நாடே கலவர காடாக உருமாறி நிற்கிறது. இதனையடுத்து மிகிந்தா ராஜபக்சே பதவி விலகினார்.இருப்பினும் அதிபர் கோத்தபய பதவி விலகக்கோரி கொழும்பு நகரில் பல இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. சில இடங்களில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த மோதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

ஆவேசமடைந்த மக்கள் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் பாரம்பரிய வீட்டை நேற்று இரவு எரித்தனர். ராஜபக்சே குடும்பத்தினரின் வீடுகள், சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. 35 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் மகிந்த ராஜபக்ச, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார். மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் அவர் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல் வெளியானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்