போலந்து வெற்றிதின கொண்டாட்டம்: ரஷ்ய தூதர் மீது சிவப்பு சாயம் வீசிய போராட்டக்காரர்கள்

By செய்திப்பிரிவு

வார்சா: போலந்து தலைநகர் வார்சாவில் நடந்த ரஷ்யாவின் வெற்றிதினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்ய தூதர் மீது எதிர்பாளர்கள் சிவப்பு சாயம் வீசினர்.

இரண்டாம் உலகப்போரில் நாஜிப் படைகளுக்கு எதிராக ரஷ்யா பெற்ற வெற்றியை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 9-ம் தேதியை ரஷ்யா வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது. அதன்படி, போலந்து நேற்று ரஷ்யாவின் வெற்றி தினத்தை நினைவு கூறும்விதமாக வார்சாவில் உள்ள சோவியத் ராணுவ நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக போலந்துக்கான ரஷ்ய தூதர் செர்கய் ஆன்ட்ரீவ் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைன் ஆதரவாளர்கள், கைகளில் உக்ரைன் கொடியை ஏந்தியபடி ரஷ்யத் தூதரைப் பார்த்து, "பாசிஸ்ட்", "கொலைகாரர்" என கோஷமிட்டனர். அப்போது சிலர் தூதர் மீது சிவப்பு சாயத்தை வீசினர்.

இந்த சம்பவம் குறித்து ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா ஜக்காரோவா கூறும் போது, "இந்த போராட்டம், ஏற்கனவே உள்ள ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மேற்கு உலக நாடுகள் நாசிசத்தை புதுப்பிக்க புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளன. உக்ரைன் நாஜிகளால் கைப்பற்றப்பட்டுவிட்டது என ரஷ்யா பலமுறை கூறி வந்திருக்கிறது. இதன் காரணமாக அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த போராட்டத்திற்கு பின்னர் போலந்து நாடாளுமன்ற உறுப்பினர் பாவல் ஜெலவ்ஸ்கி, "போலந்துக்கான ரஷ்ய அதிகாரி மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு ரஷ்யா கொடுக்க இருக்கும் பதிலடியை எதிர்கொள்ள நாடு தயாரக வேண்டும்" என்று தெரிவித்தார்.

ஆனால், போராட்டம் நடத்தியவர்கள் யார் என்பது தெளிவாக கூறப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

மேலும்