புதுடெல்லி: உக்ரைன் நாட்டில் கல்லூரிகளில் ஏராளமான இந்திய மாணவர்கள் எம்பிபிஎஸ், பொறியியல் படிப்புகளை படித்து வந்தனர்.
இந்நிலையில், பிப்ரவரி 24 -ம்தேதி ரஷ்ய ராணுவம் உக்ரைன்மீது தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து, வான்வழிப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியஅரசு 18,500 மாணவர், இந்தியர்களை தாயகம் அழைத்து வந்துள்ளது.
இதனிடையே, போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் நாடு திரும்பிய மருத்துவமாணவர்கள் கல்வியை தொடர்வது குறித்து மத்திய சுகாதார மற்றும் கல்வித்துறைஅமைச்சகங்கள் பரிசீலித்து வந்தன. ஆனால் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் சேர்ந்து படிக்க அனுமதி தரக் கோரிடெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் நேற்று உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்த18 மாநிலங்களைச் சேர்ந்த சுமார்500 மாணவர்கள், தங்களது பெற்றோருடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதற்காக உக்ரைன் எம்பிபிஎஸ் மாணவர்கள் பெற்றோர் சங்கம்(பிஏயுஎம்எஸ்) தொடங்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறும்போது, “உக்ரைன் திரும்பிச் சென்றுபடிக்கும் சூழ்நிலை அங்குஇல்லை. எனவே இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எங்களின் பிள்ளைகள் சேர்ந்து படிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும்” என்றனர். - பிடிஐ
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago