ஜெருசலேம்: ஜெருசலேமிலுள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் பாலஸ்தீன ஆர்ப்பட்டக்காரர்களுக்கும், இஸ்ரேலிய போலீசாருக்கும் இன்று நடந்த மோதலில் 150க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
யூதர்களின் பாஸ்கா பண்டிகை, கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகை, முஸ்லிம்களின் ரமலான் மாதம், ஒன்றுடன் ஒன்று தொடர்புடயைது. ஜெருசலேமில் இருக்கும் 'அல்-அக்ஸா மசூதி' முஸ்லிம்களின் மூன்றாவது புனித தளமாகும். யூதர்கள் அதனை டெம்பிள் மவுண்ட் என்று அழைக்கின்றனர். பழங்காலத்தில் அங்கு இரண்டு கோயில்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை யூதர்கள் புனிதமாக கருதும் அல்-அக்ஸா மசூதியின் மேற்குச்சுவர் பக்கம், பஸ்கா பண்டிகையைக் கொண்டாட கற்களை வீசுவதற்கு முன்பாக, டஜன் கணக்கான முகமூடி அணிந்தவர்கள் பட்டாசுகளை வெடித்து அல்அக்ஸாவிற்குள் அணிவகுத்துச் சென்றதாக இஸ்ரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய போலீசார் மீது கற்களை வீசியதாகவும், பதிலுக்கு அவர்கள் ரப்பர் தோட்டாக்களால் சுட்டதாகவும் நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலால் காயமடைந்த 153 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் மூன்று போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு பகுதிக்கும் இடையே கடந்த மூன்று வாரங்களாக நிகழ்ந்து வந்த பதட்டமான சூழலுக்கு இடையில் இன்றைய கலவரம், நிகழ்ந்துள்ளது.
» உக்ரைன் போர் | கீவ் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் அதிகரிக்கும்: ரஷ்யா எச்சரிக்கை
» சாய்வாலா: பாகிஸ்தானின் அர்ஷத் கானை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
இதுகுறித்து இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர், யார் லபிட் கூறுகையில், " கலவரங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை. ரமலான், பாஸ்கா, ஈஸ்டர் மூன்றும் ஒன்றாக வருவது நாம் அனைவரும் பொதுவானவர்கள் என்பதையேக் காட்டுகிறது. இந்த புனிதமான நாட்களை வெறுப்பைத் தூண்டும் வன்முறைக்கான தளமாக மாற்ற யாரையும் அனுமதிக்கக்கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்குப்பகுதிக்கான ஐநாவின் அமைதித் தூதர் டோர் வென்னஸ்லேண்ட், உடனடியாக இருதரப்பு அதிகாரிகளும் நிலைமையை சீர்செய்து, மேலும் கலரம் தீவிரமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு முஸ்லிகளின் புனித ரமலான் மாதத்தில் இஸ்ரேலியப் படைகளுக்கும், அல்-அக்ஸாவிற்கு வருகை தந்த பாலஸ்தீனியக்களுக்கும் இடையே ஜெருசலேமில் வெடித்த மோதல்கள் காசாவின் முஸ்லிம் ஆட்சியாளர்களான ஹமாஸ்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையே 11 நாட்கள் மோசமான மோதலுக்கு வழிவகுத்தது. மசூதியின் மேற்குச்சுவரின் திசையில் மக்கள் கற்களை வீசியதைத் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டதால் மசூதி இருக்கும் மைதானத்திற்குள் நுழையும் கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் மசூதிக்குள் நுழைவில்லை என போலீசார் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அல்-அக்ஸா மசூதியின் இயக்குனர் ஒமர் அல் கிஸ்வானி" வன்முறை மசூதிக்குள்தான் நடந்தது. 80க்கும் அதிமான இளைஞர்கள் மசூதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்'' என்று கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த முறை போல வன்முறை நிகழக்கூடாது என்று இஸ்ரேலும் ஜோர்டானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
7 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago