நியூயார்க்: புரூக்ளின் நகரத்தில் உள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை அமெரிக்க போலீஸ் கைது செய்துள்ளது.
புரூக்ளின் நகரத்தில் உள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை நியூயார்க் போலீஸார் கைது செய்துள்ளனர். நேற்று புரூக்ளின் நகரத்தில் உள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்ற போதிலும் 13 பேர் வரை படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் அமெரிக்காவைத் தாண்டி உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்தான் ஒரு நாள் தேடலுக்கு பிறகு துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை நியூயார்க் நகர போலீஸார் கைது செய்துள்ளனர். சந்தேகத்துக்குரிய நபராக கைது செய்யப்பட்டுள்ளவர் பெயர், ஃபிராங்க் ஜேம்ஸ். 62 வயதாகும் இவர் மீது தீவிரவாத தடுப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் நிலையத்தில் 33 முறை சுட்ட ஃபிராங்க் ஜேம்ஸ், யூடியூப்பில் பிரபலமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அமெரிக்க அரசியல் தொடர்பான பல வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். இதனிடையே, தான் யூடியூப்பின் வழிகாட்டுதல்களை மீறியதற்காக அவர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. இப்போது காவலில் வைக்கப்பட்டுள்ள அவரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago