ஷாங்காய்: சீனாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம் ஷாங்காய். இங்கு கரோனா தொற்று பரவியதால், கடந்த 5ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கடந்த ஞாயிற்றுகிழமையன்று, ஒரே நாளில் சுமார் 25,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.
இதனால் அங்கு ஊரடங்கு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். உணவு, மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகமும் ஸ்தம்பித்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், தங்கள் வீடுகளில் இருந்தபடியே தெருவில் நிற்கும் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர்கள் அதிகாரிகளிடம் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago