பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று தனது 90-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
6-ம் ஜார்ஜ், எலிசபெத் போவெஸ் லியோன் அரச தம்பதியரின் மகளாக 1926 ஏப்ரல் 21-ம் தேதி எலிசபெத் பிறந்தார். அவரது முழு பெயர் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரியா மேரி.
கடந்த 1947 நவம்பர் 20-ல் எடின்பர்க் கோமகன் பிலிப்ஸ் மவுன்ட்பேட்டனை திருமணம் செய்தார். அவர்களுக்கு இளவரசர் சார்லஸ், இளவரசி அனி, இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வர்ட் ஆகிய பிள்ளைகள் உள்ளனர். கடந்த 1953 ஜூன் 6-ம் தேதி பிரிட்டிஷ் ராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்றார். 62 ஆண்டுகள் ராணியாக வீற்றிருக்கும் அவர் நேற்று தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அரசு குடும்பத்தின் தரப்பில் அரிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.
விண்டஸர் அரண்மனையில் ராணி எலிசபெத்தும் எடின்பர்க் கோமகன் பிலிப்ஸும் நேற்று பொதுமக்களை சந்தித்தனர். ராணியின் பிறந்த நாளையொட்டி பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ஆயிரம் ஒளிவிளக்குகள் ஏற்றப்பட உள்ளன. அதில் முதலாவது ஒளிவிளக்கை விண்ட்சர் அரண்மனையில் ராணி ஏற்றினார்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், நாட்டின் அசைக்க முடியாத பலம் ராணி எலிசபெத் என்று தெரிவித்துள்ளார். இதேபோல உலகத் தலைவர்கள் பலரும் ராணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago