வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கல்: அமிதாப், ஐஸ்வர்யா ராய் உள்பட 500 இந்தியர் பெயர்கள் அம்பலம் - பனாமா பேப்பர்ஸ் அதிர்ச்சி தகவல்கள்

By ஏஎஃப்பி

பிரபல நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, டிஎல்எஃப் உரிமையாளர் கே.பி.சிங் உள்பட 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வரி ஏய்ப்பு செய்து பனாமா நாட்டில் கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக ‘பனாமா பேப்பர்ஸ்’ வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது. தவிர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உறவினர்கள், உதவியாளர்கள், சவுதி அரேபிய மன்னர், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட உலக தலைவர்களும் தங்களது கணக்கில் வராத சொத்துகளை பதுக்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஜெர்மனை சேர்ந்த நாளிதழ் ஒன்று இந்த தகவல்களை பெற்று புலனாய்வு இதழியலாளர்கள் சர்வ தேச கூட்டியக்கம் மூலம் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் உலகம் முழுவதும் கசியவிட்டுள்ளது

அந்த தகவலில் இந்தியாவின் பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சன் வெளிநாட்டில் இயங்கும் 4 கப்பல் நிறுவனங்களுக்கு இயக்குநராக உள்ளார் என்றும் இந்த நிறுவனம் மூலம் அவர் பல கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்து வருவதும் தெரியவந்துள்ளது.

இதே போல் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் இயுக்குனராக பொறுப்பு வகித்த நடிகை ஐஸ்வர்யா ராய், தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் இணைந்து அந்த தொழிலை நடத்தி வந்துள்ளார். பின்னர் பல்வேறு காரணங்களால் அந்நிறுவனத்தின் பங்குதாரராக தனது பெயரை ஐஸ்வர்யா ராய் மாற்றிக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

112 லட்சம் ஆவணங்கள்

பனாமாவைச் சேர்ந்த மொசாக் ஃபொன்செக்கா என்ற சட்ட நிறுவ னத்துக்கு 35க்கும் மேற்பட்ட நாடு களில் அலுவலகங்கள் உள்ளன. இந்த நிறுவனத்திடம் இருந்த பிரப லங்களின் சொத்து பட்டியல்கள் தான் தற்போது வெளியாகியுள்ளன.

இதுவரை மொத்தம் 112 லட்சம் ரகசிய ஆவணங்கள் சிக்கியிருப் பதாக கூறப்படுகிறது. இது குறித்து சர்வதேச புலனாய்வு இதழியலின் இயக்குநரான ஜெர்ராட் ரைலே கூறும்போது, ‘‘மொசாக் ஃபொன் செக்காவில் கடந்த 40 ஆண்டுகளாக தினசரி நிகழ்ந்து வந்த அலுவல் சம்பந்தமான ஆணவங்கள்தான் இவை’’ என்றார்.

சீனாவில் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக் கைகளை மேற்கொண்டு தீவிர பிரச் சாரம் செய்து வரும் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கின் குடும்பத் தினருக்கும் பனாமா நிறுவனங்க ளுடன் தொடர்பு இருப்பது அம்பல மாகியுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் பிபாவின் முக்கிய பிரதிநிதிகளும், ஹாலிவுட் நடிகரான ஜாக்கி சானும் கணக்கில் வராத பணத்தை பனாமாவில் பதுக்கி வைத்துள்ளனர்.

அம்பலமானது எப்படி?

வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் (International Consortium of Investigative Journalism) செயல்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிலும் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இந்த கூட்டியக்கத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து, 2015 இறுதி வரையுள்ள தகவல்களை புலனாய்வு இதழியல் மூலம் இந்த கூட்டியக்கம் திரட்டி ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் அம்பலப்படுத்தியுள்ளது. வரும் மே மாத இறுதிக்குள் முழு ரகசிய ஆவணங்களையும் வெளியிட திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்