வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து இந்தியா மலிவு விலை கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்வது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மீறுவது ஆகாது என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.ரஷ்யாவிலிருந்து மலிவு விலை கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இசைவு தெரிவிக்கும் வகையில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பேசியுள்ளது இந்தியாவுக்கு உத்வேக செய்தியாக அமைந்துள்ளது.
உக்ரைன் போரைத் தொடர்ந்து புதிய திருப்பமாக ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஆயத்தமாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகின. ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன. மேலும், ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து முதல்கட்டமாக 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை மலிவு விலையில் வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
வரலாறு முக்கியம்...இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, "ரஷ்யாவுக்கு எதிராக நாங்கள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மதித்து நடக்க வேண்டும் என்பதே உலக நாடுகளுக்கு எங்களின் வேண்டுகோள். இந்தியா, ரஷ்யாவிடமிருந்து மலிவு விலை கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது என்பது நாங்கள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மீறும் செயலாகாது என்றே கருதுகிறோம்.
» 'புதின் ஒரு போர்க் குற்றவாளி' - ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது அமெரிக்க நாடாளுமன்றம்
» உக்ரைன் போரின் 21வது நாள்.. இழப்புகளால் தள்ளாடும் ரஷ்யப் படைகள்
ஆனால், வரலாறு எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அத்தகைய சூழலில் ஒவ்வொருவரும் எந்தப் பக்கத்தில் நாம் நிற்கிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டியது அவசியம். ரஷ்ய தலைமையை நாம் ஆதரித்தால் அது உக்ரைன் மீதான படையெடுப்பை ஆதரிப்பதாகவே கருதப்படும்" என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் நிலைப்பாடு.. ரஷ்ய படையெடுப்பில் இதுவரை இந்தியா நடுநிலையான போக்கையே கடைப்பிடித்து வருகிறது. உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு தரப்புகளும் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஆரம்பம் முதலே இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவிலிருந்து மலிவு விலை கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இசைவு தெரிவிக்கும் வகையில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பேசியுள்ளது இந்தியாவுக்கு உத்வேக செய்தியாக அமைந்துள்ளது. மேலும், இந்தியா தனது ராணுவ தளவாட தேவைகளுக்கு ரஷ்யாவையே பெருமளவில் நம்பியிருக்கிறது என்பதையும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பைடன் நிர்வாகம் எடுத்துரைத்து விளக்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவுக்கு கண்டனம்: இந்நிலையில், இந்திய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் அமி பேரா, "இந்தியா மலிவு விலை கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், தகவல்கள் உண்மையென்றால், இந்தியா மலிவு விலையில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யவுள்ளது.
இது, வரலாற்றின் முக்கியமான ஒரு தருணத்தில் இந்தியா விளாடிமிர் புதினின் பக்கத்தை தேர்வு செய்வதாக அமையும். ரஷ்யாவின் கொடூர படையெடுப்புக்கு எதிராக உலக நாடுகள் திரண்டுள்ளன். உக்ரைன் மக்களுக்கு உலக நாடுகள் துணையாக நிற்கும் சூழலில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யக்கூடாது" என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.
உக்ரைன் போரும் விலையேற்றமும்.. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது . கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் ஒரு பீப்பாய் 100 டாலர், 110 டாலர் என விலை உயர்ந்தது. முன்பேர வர்த்தகத்தில் 120 டாலர், 130 டாலர் என தொடர்ந்து ஏற்றம் கண்டது. உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி 24-ம் தேதி தாக்குதல் தொடங்கிய பிறகு தற்போது 40% வரை உயர்ந்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ரஷ்யாவின் அனைத்து கச்சா எண்ணெய் இறக்குமதியையும் படிப்படியாக நிறுத்த இருப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தான் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவும் ஆயத்தம் ஆகி வருகிறது. முதல்கட்டமாக 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதனை இந்தியா வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago