ஜெனிவா: ரஷ்யப் படைகளால் உக்ரைன் தாக்கப்பட்டு வரும் சூழலில், அச்சுறுத்தலான நோய்ப் பரவலைத் தடுத்திடும் வகையில், அந்நாட்டின் சுகாதார ஆய்வகங்களில் உள்ள ஆபத்தான நோய்க்கிருமிகளை அழித்திட உக்ரைனுக்கு உலக சுகாதார நிறுவனம் அறிவுறித்தியுள்ளது.
சிறப்பு "ராணுவ நடவடிக்கை" என்ற பெயரில் ரஷ்யா உக்ரைன் மீது பிப்ரவரி 24ம் தேதியிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து 16 வது நாளாக இன்றும் அங்கு தாக்குதல் நடந்து வருகிறது. இந்தத் தாக்குதலில் உக்ரைனின் சுகாதார ஆய்வகங்கள் ஏதாவது தாக்கப்பட்டால், அங்கிருந்து அச்சுறுத்தலான நோய்களைப் பரப்பும் கிருமிகள் வெளியேறுவதற்கு வாய்ப்பிருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைனின் சுகாதார ஆய்வகங்களில் உள்ள ஆபத்தான நோய்க் கிருமிகளை அழித்து விடுமாறு அந்நாட்டிற்கு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற நாடுகளைப் போலவே உக்ரைன் அரசும் விலங்குள் மற்றும் மனிதன் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்தான கிருமிகளை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பது குறித்து, அமொரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு, மற்றும் உலக சுகாதார நிறுவனங்களின் நிதியுதவியுடன் தங்கள் நாட்டின் ஆய்வகங்களில் ஆராய்ச்சி நடத்தி வருகின்றது.
» புரட்சியாளர் சே குவேராவை சுட்டுக் கொன்ற பொலிவியா ராணுவ வீரர் உயிரிழப்பு
» அரை மணிக்கு ஒரு முறை ரஷ்யா குண்டு வீச்சு; மரியுபோல் நரகமாகிவிட்டது: மேயர் வேதனை
இதனிடையே ரஷ்ய தாக்குதலுக்கு முன்பும் பின்பும் உக்ரைனுடன் நடத்தி வரும் ஆய்வுகள் குறித்து சர்வதேச செய்தி ஊடகங்கள் உலக சுகாதார நிறுவனத்திடம் கேள்வி எழுப்பின. அதற்கு பதிலளித்த உலக சுகாதார ஆய்வு நிறுவனம், " தற்செயலாக அல்லது வேண்டுமென்ற பரப்பப்படும் ஆபத்தான நோய்க்கிருமிகளை எவ்வாறு தடுத்து பாதுகாப்பது என உக்ரைனின் பொது சுகாதார ஆய்வகங்களின் ஆராய்ச்சிகளுக்கு ஒத்துழைத்து மேம்படுத்தும் நடவடிக்கை பல ஆண்டுகளாக நடக்கிறது.
இதன் ஒரு பகுதியாக உலக சுகாதார நிறுவனம், உக்ரைன் சுகாதார அமைச்சகத்திற்கும், அது தொடர்புடை நிறுவனங்களுக்கும், உக்ரைன் ஆய்வகங்களில் உள்ள ஆபத்தான நோய் பரப்பும் கிருமிகளை அழித்து விடும் படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.இந்த பரிந்துரை எப்போது வழங்கப்பட்டது. அது நடைமுறை படுத்தப்பட்டதா என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த புதன்கிழமை ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், உக்ரைனில் உயிரி ஆயுதத் திட்டத்திற்கு பென்டகன் நிதியுதவி அளித்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பாதாகக் கூறியிருந்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago