உக்ரைன் மீதான தாக்குதல் எதிரொலி: ரஷ்யாவில் விசா, மாஸ்டர் கார்டு சேவை ரத்து

By செய்திப்பிரிவு

நியூயார்க்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், சர்வதேச அளவில் கடன் அட்டை பரிவர்த்தனை மேற்கொள்ளும் விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது பரிவர்த்தனை சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள சூழலில் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக பெரு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளைக் குறைத்து வருகின்றன. அந்த வகையில் தற்போது இரு கடனட்டை பரிவர்த்தனை நிறுவ
னங்களும் செயல்பாடுகளைக் குறைத்துள்ளன.

தங்களது பரிவர்த்தனை சேவை நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக விசா அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் பிரதிநிதி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் கார்டு பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் செயல்படுத்தப்படும் அட்டை பரிவர்த்தனைகளும் ரஷ்யாவில் செல்லுபடியாகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\

உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இதுபோன்று தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ரஷ்யாவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டதாக வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. சர்வதேச சேவை நிறுவனங் களான அமெரிக்காவைச் சேர்ந்த இன்டெல், ஏர்பிஎன்பி, பிரான்சின் எல்விஎம்ஹெச், ஹெர்ம்ஸ் அண்ட் சேனல் ஆகிய நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை பிப்ரவரி 24-ம் தேதி முதல் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதனிடைய ரஷ்ய வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் ரஷ்யாவில் செல்லுபடியாகும் என்றும் கார்டுகளின் செல்லுபடி காலம் வரை அதை உபயோகிக்கலாம் என்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக் கும் பயன்படுத்தலாம் என்றும் ரஷ்ய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேசமயம் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் ரஷ்ய பயணிகளை மாற்று கடன் அட்டைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

பேபால் சேவையும் நிறுத்தம்

சேவைகளை முடக்கியபோதி லும் ரஷ்யாவில் உள்ள 200 பணியாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என மாஸ்டர் கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது பேபால் நிறுவனமும் தங்களது சேவையை நிறுத் துவதாக அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE