இந்திய மாம்பழத்துக்கு தடையை நீக்க பிரிட்டன் உதவி

By செய்திப்பிரிவு

இந்தியாவின் அல்போன்சா மாம் பழத்துக்கு ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடையை நீக்க உதவுவதாக பிரிட்டன் உறுதி யளித்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தனக்கு கடிதம் எழுதியிருப்பதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி. கீத் வாஸ் கூறியுள்ளார்.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழங்களில் பூச்சிகள் இருந்ததை சுட்டிக் காட்டி கடந்த மே 1-ல் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்திய மாம்பழங்களுக்கு தடை விதிக் கப்பட்டது. இந்த தற்காலிக தடை 2015 டிசம்பர் வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக வரும் செப்டம்பர் மாதம் ஐரோப்பிய யூனியனின் உணவு மற்றும் சுற்றுச் சூழல் ஆய்வுக் குழு இந்தியா வுக்கு வந்து இந்திய மாம்பழங்கள் குறித்து ஆய்வு நடத்த இருக் கிறது. இவர்கள் எத்தகைய தரத்தி லான மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று இந்திய விவசாயிகளுக்கு ஆலோசனை கூறுவார்கள் என்று தெரிகிறது.

இந்திய விவசாயிகளின் நலனுக்காக ஐரோப்பிய யூனிய னில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கீத் வாஸ், இது தொடர் பாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுக்கும் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், கீத் வாஸுக்கு கேமரூன் கடிதம் மூலம் பதிலளித்துள்ளார். அதில் இந்திய மாம்பழத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க பிரிட்டன் உதவும் என்று உறுதியளித்துள்ளதாக கீத் வாஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஐரோப்பிய யூனி யன் சுகாதாரத் துறை கமிஷனர் டோனியோ போர்க்குடனும் மாம்பழ விவகாரம் தொடர்பாக கீத் வாஸ் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE