கிழக்கு உக்ரைனில் தவித்து வரும் இந்தியர்களை ரஷ்ய நிலப்பகுதி வழியாக அழைத்து வருவது விரைவில் சாத்தியமாகும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறினார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் இந்தியர்கள் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கார்கிவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் பிற இடங்களில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்காக நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அங்கு சிக்கியுள்ள அனைவரையும் ரஷ்ய நிலப் பகுதி வழியாக அவசரமாக வெறியேற்றுவது தொடர்பாக இந்தியாவின் கோரிக்கைகளை நாங்கள் பெற்றுள்ளோம். வெகு விரைவில் இது சாத்தியமாகும்.
இந்தியாவுடன் நாங்கள் நெருங்கிய நட்புறவு கொண்டுள்ளோம். ஐ.நா.வில் நடுநிலையான நிலைப்பாட்டை இந்தியா வெளிப்படுத்தியது. இதற்கு இந்தியாவுக்கு நன்றி. இந்தப் பிரச்சினையின் ஆழத்தை இந்தியா புரிந்து கொண்டுள்ளது. நாங்கள் ஐ.நா.வில் எங்கள் நிலைப்பாடுகளை ஒருங்கிணைத்து, எங்களின் அணுகுமுறையை இந்தியாவுக்கு தெரிவிக்கிறோம்” என்றார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த வாரம் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் அந்தப் பிராந்தியத்தில் மோதலை நிறுத்த உடனடி நடவடிக்கைகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்தது. பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியது குறிப் பிடத்தக்கது.
எஸ்-400 ஏவுகணைகள்..
டெனிஸ் அலிபோவ் தொடந்து கூறும்போது, “உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் தடையால் இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணைகள் அளிப்பதில் எந்த தடையும் இல்லை” என்றார்.
5 பில்லியன் டாலர் மதிப்பில் எஸ்-400 ஏவுகணைகள் வாங்கரஷ்யாவுடன் 2018-ம் ஆண்டுஇந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. ரஷ்யாவுடனான எஸ்-400ஏவுகணை ஒப்பந்தத்தை நிறுத்தஅமெரிக்கா நெருக்கடி கொடுத்தபோதிலும் இந்தியா பின்வாங்கவில்லை.
தற்போது உக்ரைன் மீதானரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உட்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதித்துள்ளன. இதனால், எஸ்-400 ஏவுகணைகளை இந்தியாவுக்கு அனுப்புவதில் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
- பிடிஐ
முக்கிய செய்திகள்
உலகம்
11 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago