பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கரோனா விதிமுறைகளை மீறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஊரடங்கு காலத்தில், கரோனா கட்டுப்பாட்டு வீதியை மீறி விருந்து நிகழ்வு ஒன்றில், பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்றார். இந்த நிலையில் அவரது இந்தச் செயலுக்கு கடந்த ஓர் ஆண்டாகவே எதிர் கட்சிகள் விமர்சனம் செய்து வந்தனர். மேலும் போரிஸ் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தனது செயலுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து போரிஸ் பேசியதாவது, “ கரோனா விதிகளை மதிக்கும் லட்சக்கணக்கான பிரிட்டன் மக்களுக்கு என் செயல் எப்படி இருக்கும் என்று என்னால் உணர முடிகிறது. இந்த அவை மூலமாக அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என்று தெரிவித்தார்.
» பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது : 700 காளைகள்; அடக்க துடிக்கும் காளையர்கள்
» ரஹானே, புஜாராவால்தான் இந்திய அணி தோற்றது: அடுல் வாசன் காட்டம்
ஆனால் போரிஸ் ஜான்சனின் மன்னிப்பை எதிர் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
தொழிலாளர் கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் கூறும்போது, “ பல மாத மறுப்புக்குப் பிறகு போரிஸ் கூறியிருக்கும் இந்த மன்னிப்பு பயனற்றது. சரி, இப்போதாவது போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? “ என்று கேள்வி எழுப்பினார்.
போரிஸ் ஜான்சனின் மன்னிப்பை கிண்டல் செய்து பிரிட்டனின் முக்கிய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரிட்டனில் அதிகரிக்கும் கரோனா:
பிரிட்டனில் கடந்த சில நாட்களாக 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பிரிட்டன் அரச கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பிரிட்டனில் இதுவரை கரோனாவுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago