பாரிஸ்: தடுப்பூசி செலுத்தாதவர்கள் மீது ஆத்திரம் கொண்டு தரம்தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடும் கண்டனங்களை எதிர்கொண்டுள்ளார்.
ஒமைக்ரான் தொற்று ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாகப் பரவிவருகிறது. பிரான்ஸ் நாட்டில் அன்றாடம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதியாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்த அதிபர் இமானுவேல் மேக்ரான், "தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறையில் அடைக்கப்போவதில்லை. அவர்களைக் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தப் போவதும் இல்லை. வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உணவகங்கள் செல்ல முடியாது, திரையரங்குக்குள் நுழைய முடியாது. அதுதான் இனி அரசின் கொள்கை" என்று கூறினார்.
அவரது தரக்குறைவான விமர்சனம் எதிர்க்கட்சிகளின் கண்டனத்தைப் பெற்றுள்ளது. வலதுசாரி தலைவரான மரைன் லே பென், ஒரு அதிபராக இருப்பவர் இவ்வாறாக தரம் தாழ்ந்து பேசக் கூடாது என ட்வீட் செய்துள்ளார்.
» கரோனா பாதித்தவர்களுக்கு 14 நாட்கள் தனிமையையே தொடரலாம்: உலக சுகாதார அமைப்பு
» உணவுப் பற்றாக்குறை... கடுமையான கட்டுப்பாடு: சீனாவின் ஷியான் நகரில் நடப்பது என்ன?
பிரான்ஸில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவது சந்தேகமாக உள்ளது. இந்நிலையில் ஒருவேளை அவர் போட்டியிட்டால் இதுபோன்ற பேச்சுக்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
16 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago