மியான்மரில் ஜனநாயக தேசிய லீக் (என்எல்டி) கட்சியின் சார்பில் ஆங் சாங் சூகியின் நம்பிக்கைக் குரிய நண்பர் டின் கியாவ் (69) நேற்று புதிய அதிபராக பதவி யேற்றுக் கொண்டார். இதன் மூலம் அந்நாட்டு அரசியலில் கடந்த 50 ஆண்டு காலமாக இருந்து வந்த ராணுவத்தின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
மியான்மரில் தொடர்ந்து ராணுவ ஆட்சி நடந்து வந்தது. இதை எதிர்த்து என்எல்டி தலைவர் ஆங் சாங் சூகி (70) கடுமையாக போராடி வந்தார். நாட்டில் ஜனநாயக ஆட்சி அமைய வேண்டும் என்று வலி யுறுத்தினார். இதனால் சூகியை ராணுவ ஆட்சியாளர்கள் பல ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைத்திருந்தனர்.
சர்வதேச நாடுகளின் நெருக் கடி காரணமாக சூகி விடுவிக் கப்பட்டார். அதன்பின் கடந்த நவம்பர் மாதம் நடந்த நாடாளு மன்ற தேர்தலில் சூகியின் என்எல்டி கட்சி 80 சதவீத இடங் களை கைப்பற்றியது. ஆனால், இங்கிலாந்து நாட்டவரை சூகி திருமணம் செய்துள்ளதால், மியான்மர் சட்டப்படி அவர் அதிபராக முடியவில்லை.
இந்நிலையில், கடந்த வாரம் என்எல்டி கட்சி எம்.பி.க்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பள்ளி காலத்தில் இருந்து சூகியின் நண்பராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் உள்ள டின் கியாவ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மியான்மர் அதிபராக உள்ள தெய்ன் செய்னின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய அதிபர் பொறுப் பேற்க வேண்டிய நிலை உள்ளது.
இதையடுத்து, டின் கியாவ் நேற்று அதிபராக பொறுப்பேற்றார். இதன்மூலம் கடந்த 50 ஆண்டு காலமாக இருந்து வந்த ராணுவத் தின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள் ளது. அதிபராக கியாவ் பொறுப் பேற்றாலும் ஆங் சாங் சூகிதான் பின்னணியில் இருந்து ஆட்சியை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
அதிபர் பதவி ஏற்க தடை இருந்தாலும், அமைச்சர் பொறுப் பேற்பதில் ஆங் சாங் சூகிக்கு தடை ஏதும் இல்லை. அதனால், சூகி அமைச்சராக பொறுப்பேற்பார். அவருக்கு முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனநாயகத்துக்காக போராடிய ஆங் சாங் சூகி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
2 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago