2022ல் கரோனா பெருந்தொற்று ஒழிந்துவிடும்: உலக சுகாதார அமைப்பின் தலைவர் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

ஜெனீவா: உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் சமத்துவத்தை உறுதிப்படுத்தினால் 2022ல் கரோனா பெருந்தொற்றை ஒழிக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று டெட்ரோஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கரோனா பெருந்தொற்றிலிருந்து எந்தவொரு நாடும் முழுமையாக விடுபடவில்லை. கரோனாவைத் தடுக்கவும் கரோனாவால் பாதித்தோருக்கு சிகிச்சையளிக்கவும் இன்று நிறைய மருத்துவ உபகரணங்கள் உள்ளன. ஆனால் தடுப்பூசி செலுத்துவதில் இன்னும் சமநிலை இல்லை. எவ்வளவு காலம் தடுப்பூசி செலுத்துவதில் சமத்துவமின்மை நீடிக்கிறதோ புதிய வைரஸ் உருமாற்றங்களுக்கான வாய்ப்பும் அவ்வளவு அதிகம். ஆகையால் நாம் தடுப்பூசி சமத்துவமின்மையை குறைத்தால் கரோனா பெருந்தொற்றையும் ஒழித்துவிடலாம். கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது ஆண்டை நாம் அடைந்துள்ளோம். நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் இந்த ஆண்டு தான் கரோனாவின் இறுதியாண்டாக இருக்கும்" இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் "உலக மக்கள் எதிர்கொண்டுள்ள மருத்துவ சவால் கரோனா மட்டுமே அல்ல. கரோனா பெருந்தொற்றால் மக்கள் வழக்கமான நோய்த் தடுப்பூசிகளைக் கூட எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. குடும்பக் கட்டுப்பாட்டில் தேக்கநிலை உருவாகியுள்ளது, தொற்றும் தொற்றா நோய்களுக்கான சேவையிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உலகின் முதல் மலேரியா தடுப்பூசியை மக்கள் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்" என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்