வாஷிங்டன்: தினசரி பாதிப்பில் புதிய உச்சமாக, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,72,093 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து worldometers இணையதளம் வெளியிட்ட தகவலில், “அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,72,029 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,362 பேர் பலியாகினர். புதன்கிழமை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நியூயார்க், நியூஜெர்சி, சிகாக்கோ ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கரோனா அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கடந்த வாரம் கரோனா தொற்று 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கரோனா தொற்று கடந்த வாரம் 38% வரை தொற்று அதிகரித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மெல்ல மெல்ல அதிகரித்து வந்த கரோனா தொற்று, ஒமைக்ரான் கண்டறியப்பட்ட பின், பரவலில் வேகமெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து கடந்த மாதம் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் மாறுபாடு உலகளவில் ஆயிரக்கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் அதிகரித்துள்ளது.
ஆனால், தென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அதேபோல பிரிட்டன், டென்மார்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
11 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago