பாகிஸ்தானில் இந்திய உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்ப தாக அந்த நாட்டு அரசு தெரிவித் துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு பாது காப்புத் துறை வட்டாரங்கள் கூறிய தாவது:
பலுசிஸ்தான் பகுதியில் தீவிர வாத நடவடிக்கைகளை தூண்டி விட்ட இந்திய உளவாளி ஒருவர் பிடி பட்டார். கராச்சி தீவிரவாத தாக்கு தல்களில் அவருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்று சந்தேகிக் கிறோம்.
பிடிபட்ட நபர் இந்திய கடற்படை யைச் சேர்ந்தவர் ஆவார். அவர் இந்திய உளவு அமைப்பான ‘ரா’ வின் சார்பில் உளவாளியாக பாகிஸ்தானுக்குள் ஊடுருவியுள் ளார். விசாரணைக்காக அவர் தலை நகர் இஸ்லாமாபாத் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
இந்திய உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மிர் சர்பராஸ் உறுதி செய்திருப்ப தாக ‘டான்’ பத்திரிகை தெரிவித் துள்ளது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் கவுதம் பாம்பே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட் டுள்ளது.
இந்திய அரசு மறுப்பு
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் கூறியதாவது:
இந்திய கடற்படை முன்னாள் கமாண்டர் குல் யாதவ் பூஷணை கைது செய்திருப்பதாக பாகிஸ் தான் அரசு தகவல் தெரிவித் துள்ளது. அவர் பணிக் காலத்துக்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்டார். இந்திய கடற்படைக்கோ, ரா உளவுத் துறைக்கோ அவருடன் எவ்வித தொடர்பும் இல்லை.
வெளிநாடுகளின் உள்விவ காரங்களில் இந்தியா ஒருபோதும் தலையிடுவது இல்லை. பாகிஸ்தா னில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். அதன் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
11 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago