நம்மைப்போல் பிறரையும் நேசிப்போம்; தடுப்பூசி செலுத்துவோம்: பைபிள் வாசகத்தைக் கூறி ஊக்குவித்த பிரிட்டன் பிரதமர்

By செய்திப்பிரிவு

இந்த கிறிஸ்துமஸுக்கு நெருங்கியவர்களுக்கு பரிசளிக்க நாட்டு மக்களுக்கு ஒரு யோசனையைக் கூறியுள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

பைபிளில் ஒரு வசனம் உண்டு. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே அது.

பிரிட்டனில் கரோனா அடுத்த அலையால் அன்றாடம் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு பூஸ்டர் தடுப்பூசி ஊக்குவிக்கப்படுகிறது.
இது கிறிஸ்துமஸ் காலம் என்பதால், பிரிட்டனில் கிறிஸ்துமஸ் விழா களை கட்டியுள்ளது.

இந்நிலையில் பைபிளில் உள்ள ஒரு வசனத்தை சுட்டிக்காட்டி தடுப்பூசியின் அவசியத்தைப் பிரதமர் போரிஸ் ஜான்சன் எடுத்துரைத்துள்ளார்.

இயேசு கிறிஸ்து உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக எனக் கூறியிருக்கிறார். நாம் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நமக்கு மட்டுமல்ல மற்றவருக்கும் நன்மை பயக்கும் என்பதால் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவின் உபதேசத்தைப் பின்பற்ற தடுப்பூசி செலுத்திக் கொள்வதைவிட சிறந்த நடவடிக்கை இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

கெடுபிடிகள் இல்லை: பிரிட்டனில் அன்றாடம் 1 லட்சத்துக்கும் மேல் கரோனா பாதிப்பு பதிவானாலும் கூட கிறிஸ்துமஸ் விழாவைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிக்கவில்லை. கிறிஸ்துமஸுக்குப் பின்னர் சில கடுமையான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

"இந்த கிறிஸ்துமஸ் நிச்சயமாக கடந்த கிறிஸ்துமஸைவிட மகிழ்ச்சியானதாக இருக்கும். நீங்கள் உங்கள் குடும்பத்தாரை கண்டு மகிழும் முன்னர் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தான் இந்த ஆண்டு சென்ற ஆண்டைவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு வழி கிடைத்துள்ளது" என்று போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

மேலும்