‘‘ஒமைக்ரானால் மிக மோசமான தொற்று பரவலுக்குள் நுழையும் அபாயம்: விடுமுறையை ரத்து செய்துவிட்டேன்’’- பில்கேட்ஸ் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

நியூயார்க்: வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது ஒமைக்ரான் தொற்றால் ஒரு மோசமான மிக மோசமான தொற்று பரவலுக்குள் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது, இதனால் எனது கிறிஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்துவிட்டேன் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ட்வீட் செய்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26ம் தேதி கண்டறியப்பட்ட கரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலகளவில் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிட்டது. ஒமைக்ரானுக்கு அஞ்சி, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு தடையும், பல்வேறு கடும் கட்டுப்பாடுகளையும் பல நாடுகள் விதித்துள்ளன. ஆனால், பிரி்ட்டன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலகை ஆட்டிப்படைக்கும் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

வரலாற்றில் எந்த ஒரு வைரஸையும் விட ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது விரைவில் உலகின் அனைத்து நாட்டிலும் பரவும் ஆபத்து உள்ளது.

ஒமைக்ரான் உங்களை எப்படி தாக்குகிறது என்பது பெரிதாக தெரியாது. இது டெல்டாவை விட பாதியாக இருந்தாலும், இதுவரை நாம் பார்த்த மிக மோசமான பாதிப்பாக இது இருக்கும், ஏனெனில் இது மிகவும் வேகமாக தொற்றும் தன்மை கொண்டது.

வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தோன்றியபோது, நாம் தொற்றுநோயின் மோசமான பகுதிக்குள் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரான் நம் அனைவருக்கும் வீட்டிற்கு வரும். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் வீட்டில் இப்போது அது உள்ளது. இதனால் எனது கிறிஸ்துமஸ் விடுமுறை திட்டங்களை ரத்து செய்துவிட்டேன்.

இங்கே ஒரு நல்ல செய்தி ஒன்று இருந்தால் அது இதுதான். ஒமைக்ரான் மிக விரைவாக கடந்து செல்லும் என்பது தான் அது. ஒரு நாட்டில் ஒமைக்ரான் புகுந்தால் அது அங்கு கரோனா அலை 3 மாதங்களுக்கும் குறைவாக நீடிக்கும். அந்த சில மாதங்கள் மோசமாக இருக்கலாம், ஆனால் நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால், தொற்றுநோய் 2022 இல் முடிவுக்கு வரும் என்று நான் இன்னும் நம்புகிறேன்.

இவ்வாறு பில்கேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

18 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்