பிரட்டனில் ஒமைக்ரான் வைரஸ் உக்கிரமாகி வருகிறது. இதுவரையில்லாத வகையில் நேற்று ஒரேநாளில் 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரி்ட்டன் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் 70 சதவீதம் பேர் தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திவிட்டனர், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அங்கு 3-வது அலை வாட்டி எடுத்து வருகிறது.
அடுத்த சில நாட்களில் பாதிப்பு இன்னும் கடுமையாக அதிகரிக்கும் என்று பிரிட்டன் சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர்.
இதற்கு முன் கடந்த ஜனவரியில் அதிகபட்சமாக தினசரி 10ஆயிரத்துக்கும் மேல்தான் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரேநாளில் 78ஆயிரத்து 610 பேர் பாதிக்கப்பட்டது அதிகபட்சமாகும். பிரிட்டனில் 6.7 கோடி மக்கள் வசிக்கும் நிலையில் இதுவரை 1.10 கோடி பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
» தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால் சம்பளக் குறைப்பு; பணி நீக்கம்: கூகுள் எச்சரிக்கை
» நிம்மதியாகத் தூங்கினேன்; இதுவரை பேயைப் பார்க்கவில்லை: ஜப்பான் பிரதமரின் கிண்டல் பேட்டி
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் நேற்று அளித்த பேட்டியில், “ பிரிட்டனில் அதிக சக்தி வாய்ந்த, வேகமாகப் பரவக்கூடிய ஒமைக்ரான் வைரஸால்தான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. அடுத்துவரும் நாட்களில் பாதிப்பின் தீவிரம் மேலும் அதிகரிக்கக்கூடும்” என எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே பிரிட்டனில் கரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதாக இல்ைல எனக் கூறி 100்க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு எதிராகக் கிளம்பியிருப்பது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் சுகாதாரத்துறை அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்னி ஹாரிஸ் கூறுகையில் “ கரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து ஒமைக்ரான் வைரஸ்தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.
அடுத்துவரும் நாட்களில் தற்போதுள்ள பாதிப்புகளைவிட இன்னும் மோசமாக அதிகரிக்கும். மற்ற உருமாறிய வைரஸ்களைவிட ஒமைக்ரானில்பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. பிரி்ட்டனில் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக லண்டன், மான்செஸ்டர் நகரங்களில் ஒமைக்ரானில் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட இரு நாட்களில் இரு மடங்காக உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
7 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago