ஒமைக்ரான் அலை வருகிறது: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

ஒமைக்ரான் அலை வருவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முடுக்கிவிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்ப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் 63 நாடுகளில் பரவிட்டது. டெல்டா வைரஸைவிட ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது. தடுப்பூசி மூலம் கிடைத்த நோய் தடுப்பாற்றலையும் இந்த வைரஸ் குறைக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், "யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஒமைக்ரான் பேரலை வந்து கொண்டிருக்கிறது. ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது. இந்த வைரஸ்கள் எப்படி பரவும் என்பது குறித்து நமக்கு முன் அனுபவம் இருக்கிறது. ஆதலால் நாட்டில் ஐந்தாம் கட்ட கரோனா எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமை மட்டும் 1898 பேருக்கு ஒமைக்ரான் பரவியுள்ளது. பிரிட்டனில் இதுவரை மொத்தம் 3137 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஆகையால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றார்.

டெல்டா வைரஸைவிட ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது. தடுப்பூசி மூலம் கிடைத்த நோய் தடுப்பாற்றலையும் இந்த வைரஸ் குறைக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், இங்கிலாது, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை சுகாதார அதிகாரிகள் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

பிரிட்டனில் ஒமைக்ரான் பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மூன்றாவது டோஸ் போடுவதை பிரிட்டன் முன்னெடுத்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே மூன்றாவது டோஸ் தடுப்பூசி என்ற இலக்கை பிரிட்டன் அரசு நிர்ணயித்துள்ளது. சனிக்கிழமை மட்டுமே 5,30,000 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். வீட்டில் இருந்து பணிபுரிய வாய்ப்புள்ளவர்கள் அவ்வாறே வீட்டிலிருந்து பார்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்