இஸ்லாமியக் கருத்துகளை, நெறிகளை அந்தச் சமூக மக்களுக்குப் பரப்பி வரும் தப்லீக் ஜமாத் அமைப்புக்கு திடீரெனத் தடை விதித்து சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.
தீவிரவாதத்தின் வாயில்களில் ஒன்று என்று சவுதி அரேபிய அரசு தப்லீக் ஜமாத் அமைப்பைக் குறிப்பிட்டுள்ளது உலகெங்கும் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகளையும் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உலகெங்கும் பல நாடுகளில் இருக்கும் தப்லீக் ஜமாத் அமைப்புக்குப் பெரும்பாலும் நிதியுதவி சவுதி அரேபியா நாடுகளில் இருந்துதான் சென்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சவுதி அரேபிய அரசை தப்லீக் ஜமாத்தைத் தடை செய்தது அதிர்ச்சிக்குரியதாகும்.
சவுதி அரேபியாவைப் பின்பற்றி மற்ற இஸ்லாமிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் என்ன செய்யப்போகின்றன, அங்குள்ள தப்லீக் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது கேள்வியாக இருக்கிறது.
சவுதி அரேபிய அரசின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “டாக்டர் அப்துல் லத்தீப் அல் அல்ஷேக், மசூதிகளில் உள்ள போதனை செய்பவர்களுக்கும், மசூதிகளுக்கும் பிறப்பித்த உத்தரவில், வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, அல் அஹ்பாப் எனச் சொல்லப்படும் தப்லிக் மற்றும் தவா குழுவுடன் மக்கள் பழகுவதை எச்சிரியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
சமூகத்துக்கு தப்லீக் ஜமாத்தால் ஆபத்து இருப்தால், மசூதிகள் மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். தவறான வழிகாட்டல், தடம் மாறுதல், ஆபத்து போன்றவை இந்தக் குழுவால் இருக்கிறது. தீவிரவாதத்தின் வாயில்களில் ஒன்றாக இக்குழு இருக்கிறது. சமூகத்துக்கு ஆபத்தான குழுவாக இருப்பதால், தப்லீக் தவா குழுவை சவுதி அரசு தடை செய்கிறது என்றும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.
இஸ்லாத்தில் சன்னி பிரிவைச் சேர்ந்த அமைப்பான தப்லீக் ஜமாத் அமைப்பு இஸ்லாமியக் கருத்துகளை அந்தச் சமூகத்து மக்களுக்குப் போதிப்பதாகும். அவர்கள் இஸ்லாத்தின் பாதையைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்று அறிவுறுத்தும் அமைப்பாகும்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago