சிங்கப்பூரில் கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், ஒமைக்ரான் தொற்று தடுப்பூசி எதிர்ப்பாற்றல் கொண்டதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இதுவரை ஒமைக்ரானால் உயிரிழப்பு ஏற்படவில்லை, அறிகுறிகள் டெல்டாவைவிட குறைவாகவே இருக்கிறது, தடுப்பூசியை எதிர்க்கும் ஆற்றலும் முழுமையாக இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், இது ஆரம்ப கட்ட தகவல் என்றும் கூறியுள்ளது.
இதற்கிடையில், ஃபைஸர்-பயோ என்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியை 3 டோஸ் எடுத்துக்கொண்டால் ஒமைக்ரான் (B.1.1.529 ) வைரஸை அழிக்கும் என்று முதல்கட்ட ஆய்வு முடிவுகள் வெளியானது.
அதேசமயம் இரு டோஸ் ஃபைஸர்-பயோ என்டெக் தடுப்பூசி செலுத்தினால் கூட ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராகக் குறிப்பிட்ட அளவு மட்டுமே செயல்பட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதனை மெய்ப்பிக்கும் வகையில், சிங்கப்பூரில் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
சிங்கப்பூர் விமான நிலையத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஊழியர் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. இவர் தான் சிங்கப்பூரின் முதல் உள்ளூர் ஒமைக்ரான் தொற்றாளராகக் கருதப்படுகிறார். இன்னொரு நபர், ஜெர்மனி சென்று திரும்பியவர். இவர்கள் இருவருமே மூன்றாவது டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இவர்கள் இருவரும் எந்த நிறுவன மருந்தை செலுத்திக் கொண்டனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இந்நிலையில், ஒமைக்ரான் பரவும் வேகத்தைப் பார்க்கும் போது, சிங்கப்பூரிலும் எல்லைகளிலும் இன்னும் அதிகமாக இவ்வகை வைரஸ் தொற்றாளர்கள் வரக்கூடம் என்று நாம் எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் சுகாதர அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த நவம்பர் மாதம் கணிசமான கரோனா தொற்று குறைந்தது. அங்கு 87% மக்கள் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 29% பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். விரைவில் 5 முதல் 11 வயது உடையவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மக்கள் ஃபைஸர் அல்லது மாடர்னா ஆகிய தடுப்பூசிகளையே செலுத்திக் கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago