சீனாவில் வெளிநாடுகளில் இருந்து வந்த 15 பேர் உட்பட 90 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தான் முதன்முதலில் கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா பல்வேறு விதமாக உருமாறியுள்ளது.
இதுவரை டெல்டா வைரஸ் தனது கோரத் தாண்டவத்தை முடித்துக் கொள்ளாத நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் சீனாவின் மங்கோலியா, ஹெய்லோங்ஜியாங், ஹெபெய், யுனான், குவான்டோங், சினுவா ஆகிய பகுதிகளில் 75 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முழுக்க முழுக்க உள்ளூர் தொற்று என்பது உறுதியானது. இதுதவிர வெளிநாடுகளில் இருந்து வந்த 15 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
உலகில் முதன்முதலில் சீனாவில் தான் கரோனா கண்டறியப்பட்டது. அதேபோல் மிக வேகமாக தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தியதும் சீனா தான். ஊரடங்கும், தனிமைப்படுத்துதல் போன்ற பல விஷயங்களிலும் தொற்றைக் கட்டுப்படுத்த சீனா பல விஷயங்களிலும் முன்னுதாரணமாக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
» 38 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிப்பு; இதுவரை உயிரிழப்பு இல்லை: உலக சுகாதார அமைப்பு தகவல்
இப்போது ஒரே நாளில் 90 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதால் பல்வேறு தொற்றுப் பரவல் நடவடிக்கைகளையும் சீனா முடுக்கிவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago