23  நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் : பரவல் மேலும் அதிகரிக்கலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

By ஏஎன்ஐ


தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் 23 நாடுகளில் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஒமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து, செக்குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் நேற்று ஜெனிவாவில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸின் உருமாற்ற பிரிவான ஒமைக்ரான் வைரஸ் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. முதலில் 4 அல்லது 5 மண்டலங்களில் காணப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது 23 நாடுகளுக்கு பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

ஒமைக்ரானின் இந்த வளர்ச்சியை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது, மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. ஒவ்வொரு நாட்டையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. ஆனால், ஒமைக்ரானின் இந்த வளர்ச்சி எங்களுக்கு வியப்பாக இல்லை. வைரஸ்கள் என்ன செய்யுமோ அதைத்தான் செய்கிறது. நான் அனுமதிக்கும் வரை இந்த வைரஸ் தொடர்ந்து பரவிக்கொண்டேதான் இருக்கும்.

ஒமைக்ரான் குறித்து நிறைய அறிந்து வருகிறோம், இன்னும் அதன் பரவல் குறித்து அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. அந்த நோயின் தீவிரம், பரிசோதனையின் முக்கியத்துவம், தடுப்பூசிகள், சிகிச்சை குறித்து அதிகமாக அறிந்து கொள்ள வேண்டியதுள்ளது

கடந்த இரு நாட்களாக உலக சுகாதார அமைப்பின் பல்வேறு ஆலோசனைக் குழுவின் வல்லுநர்கள் சேர்ந்து ஒமைக்ரான் வளர்ச்சி, அதன் வடிவங்கள் குறித்து ஆலோசனை நடத்தி மதிப்பீடு செய்தனர். பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்க தொடர்ந்து ஆய்வுகள் தேவை எனத் தெரிவித்தனர்.

இவ்வாறு அதானம் தெரிவி்த்தார்

ஒமைக்ரான் கண்டறியப்பட்டபின் தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், கனடா, அமெரி்க்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

உலகம்

12 days ago

மேலும்