உலகிலேயே முதல்முறை: அமெரிக்கா உயிரியல் பூங்காவில் கழுதைப்புலிக்கும் கரோனா தொற்று

By செய்திப்பிரிவு


உலகிலேேய முதல்முறையாக, அமெரிக்காவில் டென்வர் உயிரியல் பூங்காவில் இரு கழுதைப்புலிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே கழுதைப்புலியும் கரோனாவில் பாதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. இதற்கு முன், சிங்கங்கள், புலிகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கழுதைப்புலியும் பாதி்க்கப்பட்டுள்ளது.

உயிரியல் பூங்காவில் உள்ள 22வயதான கோஸி, 23வயதான கிபோ ஆகிய இரு கழுதைப்புலிகளுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இரு கழுதைப்புலிகளுக்கும் அடிக்கடி இருமல், மூக்கில் சளிவருதல், சோர்வடைந்திருத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.

டென்வர் உயிரியியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள், புலிகளுக்கு முதலில் கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அதன்பின் மற்றவிலங்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ததில் கழுதைபப்புலியும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது என்று தேசிய கால்நடை சேவை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

கழுதைப்புலிகள் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் கொலராடோ பல்கலைக்கழக ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு கரோனா இருப்பது உறுதி செய்யப்படன. இதுவரை டென்வர் உயிரியில் பூங்காவில் 2 கழுதைப்புலிகள், 11 சிங்கங்கள், 2 புலிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வனஉயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் “ கழுதைப்புலிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கடினமானது. அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை கழுதைப்புலிகள், ஆந்த்ராக்ஸ், ரேபிஸ், போன்ற பல்ேவரு கொடிய வைரஸ்களையும் தாங்கி உயிர்வாழக்கூடியவை கழுதைப்புலிகள். அவைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது வியப்புக்குரியது, மற்றவகையில் கழுதைப்புலிகள் ஆரோக்கியமாக இருக்கின்றன” எனத் தெரிவிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் விலங்ககுளுக்கும் பரவுவது குறித்து அறிவியல் வல்லுநர்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால், அறிவியல் உலகிற்கு கிைடத்துள்ள தகவலின்படி, விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவுவது குறைவாகும். அதேசமயம், கரோனாவில் பாதி்க்கப்பட்ட மனிதர்கள் விலங்குகளுடன் நெருங்கிப்பழகுவதை தவிர்க்க வேண்டும். அவற்றுக்கு மனிதர்கள்மூலம் பரவவும் வாய்ப்புள்ளது என்று அமெரிக்க வேளாண் மற்றும் கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்