பிரதிநிதித்துவப் படம் 
உலகம்

லாட்டரியில் 2 மில்லியன் டாலர் பரிசு: கரோனாவில் காத்திருந்து வென்ற அமெரிக்க முதியவர்

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் கரோனாவுக்கு முன்பு வாங்கிய லாட்டரியில் 2 ஆண்டுகளும் 8 மாதங்களுக்கும் பிறகு நடந்த குலுக்கலில் 65 வயது முதியவர் ஒருவர் 2 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை வென்று ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அமெரிக்காவின் சாலிஸ்பரியைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் இரண்டு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.

‘$2,000,000 ரிச்சர்’ கீறல் டிக்கெட்டுகளை வாங்கினார் என்று மேரிலாண்ட் லாட்டரி மற்றும் கேமிங் கன்ட்ரோல் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற தொழிலாளியான அவர் லாட்டரி சீட்டை வாங்கிய பிறகு கரோனா தொற்று பரவல் காரணமாக குலுக்கல் தேதி மாற்றப்பட்டது.

இதனால் அவர் தான் வாங்கிய லாட்டரி டிக்கெட்டை பாதுகாக்க பெரும் பாடுபட்டுள்ளார். அவரது டிக்கெட்டை வீட்டில் பாதுகாப்பாக பாதுகாத்து வைத்து, அவரது பரிசைப் பெற கடைசி தேதி வரை காத்திருந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நான் சற்று பதட்டமாக இருந்தேன். எங்கள் வீட்டில் தீ ஏற்பட்டால் டிக்கெட் எரிந்துவிடும் என்று நான் கவலைப்பட்டேன், டிக்கெட்டின் காலாவதியாகி விட்டதாக அறிவிப்புக் கூட வரலாம், அது உண்மைதானா என்ற சந்தேகம் கூட இருந்தது. இதனால் பல நாட்கள் கவலையுடன் இருந்தேன். கரோனா காலத்தில் எனது மனச்சுமை மிகவும் அதிகமாக இருந்தது.’’ என்று அவர் கூறினார்.

இந்த லாட்டரியில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விற்பனை தொடங்கப்பட்டது. பிறகு கரோனா வந்ததால் உடனடியாக குலுக்கல் நடைபெறவில்லை. 2021-ம் ஆண்டு நவம்பர் -1ம் தேதி இறுதி தேதியாக மாற்றி அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் 2 ஆண்டுகள் 8 மாதங்களுக்கு பிறகு லாட்டரி குலுக்கல் முடிவுக்கு வந்தது.

ஆனால், 65 வயது முதியவர் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி என்பது உறுதியானது. கரோனா தொற்று சூழல் குறைந்து லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடந்தது. அப்போது அவர் வாங்கிய இரண்டு லாட்டரிக்கும் பரிசு விழுந்துள்ளது.

முதல் டிக்கெட்டில் அவருக்கு 100 அமெரிக்க டாலர் பணம் கிடைத்துள்ளது. இரண்டாவது டிக்கெட் பெரிய வெற்றி, 2 மில்லியன் அமெரிக்க டாலர் ஜாக்பாட் தொகையாக கிடைத்துள்ளது,

மேரிலாண்ட்டைச் சேர்ந்த இதே 65 வயது முதியவர் சில ஆண்டுகளுக்கு முன்பு 2 மில்லியின் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை வேறு ஒரு லாட்டரியில் வென்றுள்ளார். அப்போது அந்த தொகையை அவர் ஓய்வு காலத்துக்கு பயன்படுத்தவும், குடும்பத்தை விடுமுறைக்கு அழைத்துச் செல்லவும் பயன்படுத்திக் கொண்டார்.

இப்போது, அவர் மீண்டும் லாட்டரி பரிசை பெற்றுள்ள நிலையல் அதனை தனது வீட்டை விரிவுபடுத்தவும், குடும்பத்துடன் விடுமுறையில் செல்லவும் பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT