சீனாவில் வரும் நாட்களில் கரோனா அதிகரிக்கும்

By செய்திப்பிரிவு

சீனாவில் வரும் நாட்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெய்ஜிங்கில் தேசிய சுகாதார அதிகாரிகளில் ஒருவரான வு லியான்வூ பேசும்போது, “ சீனாவில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா தொற்று அதிகமாகி வருகிறது. அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 11 மாகாணங்களில் கரோனா பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பல இடங்களில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. அதிக அளவிலான பொதுமக்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், சுற்றலா தலங்களை உடனடியாக மூடவும் மாகாண அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

சீனாவில் தங்கி இருக்கும் மங்கோலியர்களுக்கு கரோனா அதிகளவில் பரவி வருகின்றது.

மேலும் புதிய வகை கரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் லான்சோ நகர் பிறபகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், கரோனா பரவல் சீனாவில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸ் வேற்றுருவாக்கம் அடைந்து, முதல் அலை, இரண்டாம் அலை என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

உலக அளவில் பிரிட்டன், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

10 days ago

மேலும்