கரோனாவின் ஆறாவது அலையை எதிர்கொள்ள ஈரான் தயாராகி வருகிறது.
இதுகுறித்து ஈரான் ஊடகங்கள் தரப்பில், “ ஈரான் சமீப நாட்களாக கரோனா தடுப்பூசி செலுத்துவதை தூரிதப்படுத்தி வருகிறது. இருப்பினும் நாட்டின் சில பகுதிகளில் கரோனா பரவல் தீவிரமாக இருப்பதன் காரணமாக அடுத்த மாதத்தில் ஈரான் ஆறாவது கரோனா அலையை எதிர்க் கொள்ள இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் முடிந்த வரையில் கரோனா ஆறாவது அலையை தடுப்பதற்கான தீவிர முயற்சியில் ஈரான் இறங்கியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஈரானும் ஒன்று. ஈரானில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
» கடந்த 7 ஆண்டுகளில் ஊழலைக் கட்டுப்படுத்துவதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்
» டி20 உலகக் கோப்பைக்காக ஸ்காட்லாந்து அணியின் ஜெர்ஸியை வடிவமைத்த 12வயது மாணவி
ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளிலும் கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம், பல நாடுகள் புதிதாக கரோனா அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன. குறைவான அளவு தடுப்பூசி செலுத்திய மக்கள் இருக்கும் நாடுகளில் கரோனாவால் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 24 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
4 days ago