ஜப்பானில் அசோ எரிமலை வெடிக்க தொடங்கியது

By செய்திப்பிரிவு

ஜப்பானின் மவுண்ட் அசோ எரிமலை கரும்புகையுடன் வெடிக்கக் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் தரப்பில், “ ஜப்பானின் க்யூஷு தீவில் அசோ எரிமலை இன்று (புதன்கிழமை) காலை 11.43 முதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து கரும்புகைகள் வெளிவர தொடங்கியுள்ளன.

எரிமலை சுற்றி 1 கிலோமீட்டருக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்புக் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளிவரவில்லை. புகை அதிகமாக வெளியேறுவதால் சுற்றுலா பயணிகளும் க்யூஷு தீவுப் பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

அசோ எரிமலை 2019 ஆம் ஆண்டு வெடித்தது. இந்த நிலையில் மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

ஜப்பானில் செயல்படும் நிலையில் மொத்தம் 103 எரிமலைகள் உள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஜப்பானில் உள்ள மவுண்ட் ஆன் டேக் முன்னெச்சரிக்கை அறிகுறிகளுடன் வெடித்தது. இதில் 57 பேர் பலியாகினர்.

கடந்த 90 ஆண்டுகளில் ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றம் இந்த எரிமலை வெடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

4 days ago

மேலும்