பாகிஸ்தானில் கொண்டு வரப்படும் கட்டாய மதமாற்ற தடை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாகிஸ்தானில் இந்து, கிறிஸ்தவ மற்றும் சீக்கிய மதங்களைச் சேர்ந்த சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்யப்படும் சம்பவங்கள் வாடிக்கையாகி வருகிறன. கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இதனையடுத்து அங்கு கட்டாய மதமாற்ற எதிர்ப்பு சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக புதிய கட்டாய மதமாற்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவில் மதம் மாற விரும்புபவர்கள் சுய விபரங்களுடன் எதற்காக மதம் மாறுகிறோம் என்ற தகவலை மாவட்ட நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும், மதம் மாறுபவர்கள் வற்புறுத்தல், மிரட்டல் காரணமாக மதம் மாறவில்லை என்பதை நீதிபதியே உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
» ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20க்குக் கொள்முதல்: மின்வாரியம் நலிவடையும்- ராமதாஸ் எச்சரிக்கை
» அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் தொடக்கம்: எம்ஜிஆர், ஜெ. நினைவிடங்களில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் மரியாதை
கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை, 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த மசோதாவில் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் இஸ்லாமுக்கு எதிரான எந்த ஒரு சட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago