இந்தியா- இலங்கை கூட்டு ராணுவ பயிற்சியான 'மித்ர சக்தி' அம்பாறையில் நிறைவடைந்தது.
இந்திய மற்றும் இலங்கை ராணுவங்களுக்கிடையேயான கூட்டு பயிற்சியின் 8-வது பதிப்பான மித்ர சக்தி 2021 அக்டோபர் 4 முதல் 16 வரை நடைப்பெற்று அம்பாறை போர் பயிற்சி பள்ளியில் நிறைவடைந்தது.
தாக்குதல் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் அடிப்படையிலான மித்ர சக்தி, இலங்கை ராணுவத்தால் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய இருதரப்பு பயிற்சியாகும். இந்தியா மற்றும் இலங்கையின் வளர்ந்து வரும் பாதுகாப்புக் கூட்டின் முக்கியப் பகுதியாக இது விளங்குகிறது. கடந்த 14 நாட்களாக நடைபெற்ற கூட்டு பயிற்சிகளின் போது, இரண்டு குழுக்களும் மிகுந்த உற்சாகத்தையும் தொழில் திறனையும் வெளிப்படுத்தின.
பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சியை இந்திய ராணுவ தளபதி ஜெனரல் எம் எம் நரவனே மற்றும் இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா பார்வையிட்டனர்.
» கேரளாவில் கனமழை, நிலச்சரிவு- 8 பேர் பலி: மண்ணில் புதைந்த 22 பேர்; மீட்பு பணியில் ராணுவம்
» கடந்த 220 நாட்களில் இல்லாத அளவு கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் குறைந்தனர்
ஆயுதப் படைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு-செயல்பாட்டை ஊக்குவிப்பதைத் தவிர, இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தவும் மித்ர சக்தி உதவியது. பயிற்சியின் நிறைவில் இதில் பங்கேற்ற குழுக்கள் மிகுந்த திருப்தியை வெளிப்படுத்தியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago