அமெரிக்க மாணவனுக்கு வட கொரியாவில் 15 ஆண்டு சிறை

By ராய்ட்டர்ஸ்

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடு பட்டதாக அமெரிக்க மாணவனுக்கு, வட கொரிய உச்ச நீதிமன்றம் 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.

ஐ.நா. உட்பட எந்த சர்வதேச அமைப்பின் விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் வட கொரியா அரசு செயல்பட்டு வருகிறது. அணு ஆயு தங்கள், ஏவுகணைகளை அவ்வப் போது சோதனை செய்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவை அழிப்போம் என்று பகிரங்கமாகவே மிரட்டி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து சுற்றுலா சென்ற மாணவ னுக்கு வடகொரிய உச்ச நீதி மன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தைச் சேர்ந்த மாணவர் ஒட்டோ வார்ம்பியர் (21) விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் புத்தாண்டை முன்னிட்டு 5 பேருடன் வட கொரியாவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு அவர் தங்கியிருந்த ஓட்டலில் அரசியல் வாசகம் பொறிக்கப்பட்ட பதாகை ஒன்றை திருட முயற்சி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஒட்டோவை போலீஸார் கைது செய்து அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் ஒட்டோவுக்கு 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

4 days ago

மேலும்