ரஷ்யாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் கரோனாவுக்கு 1000 பேர் வரை பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத்துறை தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,208 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1002 பேர் பலியாகி உள்ளனர். கரோனாவுக்கு ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பலி இதுவாகும். தொடர்ந்து நான்காவது நாளாக ரஷ்யாவில் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று அதிகரித்தாலும், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு இல்லை என்று ரஷ்ய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கரோனா வைரஸுக்கு எதிராக முதல் முதலாகத் தடுப்பூசியை அறிமுகம் செய்த நாடு ரஷ்யா. இந்த நிலையில் ரஷ்யாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் மட்டுமல்லாது உள்நாட்டிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக்கொண்ட சிலர், இரண்டாவது தவணை தடுப்பூசி போட முடியாமல் காத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
» கொளத்தூர் தொகுதியில் ரூ.2.87 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
இந்த நிலையில் விரைவில் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 78 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago