ஆப்கானிஸ்தானில் குண்டஸ் நகரில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 100-க்கும் அதிகமானவர்கள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் வெள்ளிக்கிழமை ஷியா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 100 பேர்வரை பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். ஷியா முஸ்லிம்களை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலிக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்குப் பிறகு ஐஎஸ் அமைப்புகள் தொடர்ந்து அங்கு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஷியா முஸ்லிம்களை குறி வைத்து அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
» முதல் பார்வை: என்றாவது ஒரு நாள்
» உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் எதிர்கொண்ட கேலி - பிரியங்கா சோப்ரா பகிர்வு
காபூல் விமான நிலையம் அருகே ஆகஸ்ட் 27-ம் தேதி நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 18 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 143 பேர் படுகாயமடைந்தனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஐஎஸ்-கோராசன் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்தநிலையில் அந்நாட்டில் தற்போது மீண்டும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago