பிரேசிலில் கரோனா பலி 6 லட்சத்தை கடந்தது

By செய்திப்பிரிவு

பிரேசிலில் கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள், “ பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 615 பேர் கரோனாவினால் பலியாகியுள்ளனர். 18,172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிரேசிலில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது. மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் பிரேசிலில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. பிரேசிலில் 2.1 கோடி பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘நாம் இந்தத் தொற்றின் நடுவில் இருக்கிறோம். முழுமையாக கரோனாவிலிருந்து வெளியே வரவில்லை. இன்னும் பல நகரங்களில் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. பலர் உயிரிழந்து வருகின்றனர். ஆனால், மக்கள் கரோனா முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்’’ என்று உலக சுகாதார அமைப்பு சில நாட்களுக்கு முன்னர் கூறி இருந்தது.

கரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளே முதன்மையானதாகப் பார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி உள்ளன.

உலகம் முழுவதும் 23 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 கோடி பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 47 லட்சம் பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்